யாழ்ப்பாணத்தில் 17 வயது சிறுமிகள் இருவரை கடத்திச் சென்றவர்களிற்கு விளக்கமறியல்!

யாழ்ப்பாணத்தில் 17 வயது சிறுமிகள் இருவரை கடத்திச் சென்றமை மற்றும் தகாத செயலில் ஈடுபட்டமை என்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் பேருந்து சாரதிகள் இருவர், நடத்துநர்கள் இருவர் உட்பட ஐவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அத்துடன், வீட்டைவிட்டு வெளியேறி துர்நடத்தையில் ஈடுபட்ட சிறுமிகள் இருவரையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் கட்டளையிட்டது.
இந்தக் கைது நடவடிக்கை நேற்று இடம்பெற்ற நிலையில், சிறுமிகள் இருவரும், குற்றஞ்சாட்டப்பட்ட ஐவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று முற்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவுகள் வழங்கப்பட்டன.

Leave a Reply