
ஐரோப்பிய ஒன்றிய மனிதாபிமான உதவி (EU) நிதி பங்களிப்பின் ஊடாக வேர்ள்ட் விஷன் லங்கா (WVL) கொவிட் 19 மனிதாபிமான உதவி திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதற்கட்டமாக சிறுவர்கள், பெண்கள் மற்றும் ஆண்களுக்கான 3200 சுகாதார பொதிகள் இன்று (10.11.2021) பிராந்திய முகாமையாளர் வேர்ள்ட் விஷன் லங்கா (WVL) திரு.ஜெ.ஜெபராஜ் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட சுகாதார பணிப்பாளர் வைத்தியர் N.மயூரன் அவர்களிடம் கையளிக்கப்பட்டதுடன் மேலும் பல உதவிகள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு தொடர்ந்தும் வழங்க எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது.





