காற்றாலை மின்னுற்பத்தி: அதானி குழுமத்திற்கு அனுமதி

கொழும்பு, ஓக 19

500 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிக பெறுமதி கொண்ட இரண்டு காற்றாலை மின்னுற்பத்தி திட்டங்களுக்காக இந்தியாவின் அதானி குழுமத்திற்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வலுசக்தி திட்டங்கள் தொடர்பிலான முன்னேற்றம் குறித்து மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் போது இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதற்கமைய மன்னாரில் அமைக்கப்படவுள்ள 286 மெகாவாட் அளவிலான மின்னுற்பத்தி திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் பூநகரி பகுதியில் அமைக்கப்படவுள்ள 234 மெகாவாட் அளவிலான மின்னுற்பத்தி திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே மின்சார சட்டத் திருத்தத்தின் காரணமாக தாமதமடைந்த 46 திட்டங்களில் 21 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் அடுத்த வாரம் கைச்சாத்திடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply