சேதன உர இறக்குமதி பரிவர்த்தனைகள் தொடர்பில் விசேட விசாரணை

<!–

சேதன உர இறக்குமதி பரிவர்த்தனைகள் தொடர்பில் விசேட விசாரணை – Athavan News

பல சர்ச்சைகளுக்கு வழிவகுத்த சேதன உர இறக்குமதி பரிவர்த்தனைகள் தொடர்பில் இலங்கையின் தேசிய கணக்காய்வு அலுவலகம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

கணக்காளர் நாயகம் டபிள்யூ.பி. விக்கிரமரத்ன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

சீனாவில் இருந்து சேதன உர இறக்குமதி மற்றும் இந்தியாவில் இருந்து திரவ சேதன உர இறக்குமதி ஆகியவற்றின் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணை அறிக்கைகள் கூடிய விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Leave a Reply