இலங்கைக்கு உதவ இந்தியா எப்போதும் துணைநிற்கும்: எஸ்.ஜெய்சங்கர்

கொழும்பு,ஓக 19

இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் மேற்கொள்ளும் வேலைத்திட்டங்களுக்கு இந்தியா எந்தெவொரு சந்தர்ப்பத்திலும் ஒத்துழைப்பை வழங்க தயாராக இருப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.

மேலும், இந்தாண்டு மட்டும் இந்தியா 3.8 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தாய்லாந்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் ‘இந்தோ-பசிபிக் பற்றிய இந்தியாவின் பார்வை’ என்ற தலைப்பில் விரிவுரை ஆற்றிய பின்னர் தொடர்ச்சியான கேள்விகளுக்கு ஜெய்சங்கர் பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Leave a Reply