புத்தளத்தை வந்தடைந்த இந்திய அரசின் நிவாரண பொருட்கள்!(படங்கள் இணைப்பு)

இந்திய அரசாங்கத்தினால் இலங்கை மக்களுக்காக அன்பளிப்பாக வழங்கப்பட்ட இரண்டாம் கட்ட நிவாரண பொருட்கள் இன்று புத்தளத்திற்கு கொண்டுவரப்பட்டது.

கொழும்பிலிருந்து புத்தளம் பயணம் செய்த பயணிகள் ரயிலில் விஷேடமாக பொருத்தப்பட்ட பொருட்களை கொண்டு செல்லும் மூன்று ரயில் பெட்டிகளில் மேற்படி நிவாரண பொருட்கள் கொண்டுவரப்பட்டன.

பிற்பகல் 1.20 மணியளவில் புத்தளம் ரயில் நிலையத்தை வந்தடைந்த நிவாரண பொருட்களை புத்தளம் மாவட்டச் செயலக அதிகாரிகள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

அதனையடுத்து, புத்தளம், வன்னாத்தவில்லு , முந்தல் உள்ளிட்ட பிரதேச செயலகங்களுக்கு குறித்த நிவாரண பொருட்களான பால் தா மற்றும் அரிசி மூடைகள் பகிர்த்தளிக்கப்பட்டதுடன், பிரதேச செயலகங்கள் ஊடாக அவை பொதுமக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply