Today Rasi Palan 13th November 2021 | இன்றைய ராசிபலன்

Today Rasi Palan 13th November 2021 | இன்றைய ராசிபலன் : நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். சில வேலைகளை விட்டுக்கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். மாறுபட்ட அணுகு முறையால் சாதிக்கும் நாள்.

ரிஷபம்: பிரச்சினைகளின் ஆணி வேரைக் கண்டறிவீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். மதிப்புக் கூடும் நாள்.

மிதுனம்: குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். உற்சாகமான நாள்.

கடகம்: சந்திராஷ்டமம் இருப்பதால் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். உறவினர் நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் ஈகோ அதிகரிக்கும். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.

சிம்மம்: தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். மனைவி வழியில் ஆதரவு பெருகும். வாகனத்தை சீர் செய்வீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். உத்தியோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

கன்னி: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியடையும். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். தொட்டது துலங்கும் நாள்.

துலாம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். புது வேலை அமையும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.

விருச்சிகம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.

தனுசு: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை சந்திக்க நேரிடும். வீடு மனை வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். விருந்தினர்களின் வருகையால் வீடு களை கட்டும். உத்தியோகத்தில் உங்கள்உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். நினைத்ததை முடிக்கும் நாள்.

மகரம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பழைய பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். அழகும் இளமையும் கூடும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி வரும். புது நட்பு மலரும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய அத்தியாயம் தொடங்கும் நாள்.

கும்பம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். சிலர் உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சிப்பார்கள். உத்தியோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். திட்டமிட்டுச் செயல்பட வேண்டிய நாள்.

மீனம்: குடும்பத்தை பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வெளிஉணவுகளை தவிர்ப்பது நல்லது. திடீர் பயணங்கள் செலவுகளால் திணறுவீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் விட்டுக் கொடுத்து போங்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.

Leave a Reply