இந்தியாவின் மூன்றாம் கட்ட நிவாரண உதவி!

இந்தியா தமிழ்நாட்டின் ஊடாக வழங்கப்பட்ட மனிதாபிமான உலர் உணவுப் பொதிகள் இன்று (21) காலை 10.00 மணி அளவில் கிண்ணியா பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளரினால் பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட 31 கிராம சேவையாளர் பிரிவுக்குமாக 10 கிலோ அடங்கிய 500 பொதிகளுள் -சுமார் 2500 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளும்

இதேவேளை 750 குடும்பங்களுக்கான பால்மா பக்கெட்டுகளும் வழங்கப்பட்டுள்ளன.
இன்று பிரதேச செயலாளர் எம்.எச்.எம். கனியிடம் வழங்கி வைக்கப்பட்டன.

கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட 31 கிராம சேவையாளர் பிரிவுகளில் உள்ளன.

இவற்றுள் இன்று இரண்டு கிராம சேவையாளர்கள் பிரிவுகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

பைசல் நகர் கிராம சேவகர் பிரிவில் உள்ள 220 குடும்பங்களுக்கும், அண்ணல் நகர் கிராம சேவர் பிரிவில் உள்ள 180 குடும்பங்களுக்கும் நிவாரணப் பொருட்கள் இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டன.

இவ் நிவாரண பொருட்கள் வழங்கும் வைபவத்தில் கிண்ணியா பிரதேச செயலாளர் ,பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப் முதலானவர்கள் கலந்து கொண்டனர்.

பிற செய்திகள்

Leave a Reply