ரயிலில் மோதுண்ட கெப் வண்டி; அதிஷ்டவசமாக உயிர்தப்பிய சாரதி

புத்தளம் – பாலாவி சிமெந்து தொழிற்சாலையிலிருந்து அருவக்காட்டிற்குச் சென்ற புகையிரதத்தில் கெப்ரக வண்டியொன்று இன்று பிற்பகல் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து புத்தளம் தில்லையடி ரத்மல்யாய பகுதியில் இடம்பெற்றுள்ளது.

விபத்துக்குள்ளான கெப் வண்டியின் முன்பக்கம் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், கெப் வண்டியின் சாரதி சிறு காயங்களுடன் அதிஷ்டவசமாக உயிர்த்தப்பியுள்ளார்.

குறித்த இடத்தில் ரயில் பாதுகாப்புக் கடவை இல்லாமையினாலேயே குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புத்தளம் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பிற செய்திகள்

Leave a Reply