நாட்டை மீட்டெடுக்கத் தமிழ்த் தலைவர்களும் கைகோர்க்க வேண்டும்! – ரணில் அழைப்பு

இலங்கையை மீட்டெடுக்கத் தமிழ்த் தலைவர்களும் இணைய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்தார்.

அநுராதபுரம் கோல்டன் மெங்கோ மண்டபத்தில் நடைபெற்ற அநுராதபுரம் மாவட்ட அபிவிருத்தி சபையில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“இந்த நாட்டுக்குச் சுதந்திரம் கிடைக்க அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட்டனர். சுதந்திரம் பெற்ற பிறகுதான் பிரிந்தனர். இப்போது நமக்கு முன்னால் ஒரு கடினமான காலம் உள்ளது. நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும். சுதந்திரம் பெற இடதுசாரித் தலைவர்கள் ஒன்று சேர்ந்தனர். ஜீ.ஜீ.பொன்னம்பலம் போன்ற தமிழ்த் தலைவர்களும் இருந்தனர். அவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்தனர். நாம் அனைவரும் மீண்டும் இணைந்து செயற்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது” – என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply