நாட்டில் கொரோனாத் தொற்று அதிகரித்தால் மீண்டும் பாடசாலைகள் மூடப்படும் அபாயம் காணப்படுவதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள் நல வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை முழுவதும் கொரோனா தொற்றுக்கு இலக்கான நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை நாங்கள் காண்கிறோம்.
குழந்தைகள் மத்தியில் கொரோனாத் தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பாடசாலை மாணவர்களிடையேயும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.
இதன் விளைவாக பாடசாலைகளை மீண்டும் மூட வேண்டியிருக்கும். பெரியவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நோயை வீட்டுக்கு எடுத்துச் செல்ல வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தளவாய் பகுதியில் சட்ட விரோத மணல் அகழ்வு: மக்கள் குற்றச்சாட்டு!




