எதிர்ப்பு போராட்டங்கள் டொலர்களை ஈட்டுவதில்லை! கம்மன்பில

எதிர்ப்பு போராட்டங்கள் டொலர்களை ஈட்டுவதில்லை என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மீளத் திறக்கக் கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், நாட்டின் வெளிநாட்டு கையிருப்பைப் பாதுகாப்பதற்காகவே கச்சா எண்ணெய் இறக்குமதியை இலங்கை நிறுத்தியது.

கச்சா எண்ணெய் இறக்குமதியை ஆரம்பித்து எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகளை மீண்டும் தொடங்குவது அவசியம் என நானும் கருதுகின்றேன்.

எனினும், போராட்டங்கள் டொலர்களை ஈட்டித் தருவதில்லை என்ற கசப்பான உண்மையை தொழிற்சங்கங்கள் புரிந்து கொள்ளவில்லை.

தொழிற்சங்கங்கள் தங்கள் நடவடிக்கைகளை முன்கூட்டியே சிந்திக்க வேண்டும். எரிசக்தி அமைச்சராக தனக்கும் டொலர் சம்பாதிக்கும் திறன் இல்லை.

நான் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதாக இருந்தால், திறைசேரி தனக்கு டொலர்களை வழங்க வேண்டும்.

திறைசேரிக்கு டொலர்களை ஈட்டக்கூடிய வழிமுறைகளை அமைச்சு தற்போது வகுத்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஆரோக்கியமற்ற சூழலில் நாவலரின் சிலை! ஆறுமுகநாவலர் சபையின் தலைவர் யாழ். மாநகர முதல்வருக்கு கடிதம்!

Leave a Reply