
யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளர் ரி.ஜெயசீலனுக்கு கொரோனாத்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மாநகர சபை ஆணையாளருக்கு கொரோனாத் தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டதை அடுத்து முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.
அத்துடன், அவருடன் பணியாற்றும் 15 உத்தியோகத்தர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. எனினும் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் சுகாதாரத் துறையினர் குறிப்பிட்டனர்.



