யாழ். பல்கலையில் பல தடைகளையும் தாண்டி ஏற்றப்பட்ட கார்த்திகை தீபம்

தமிழர்களின் பாரம்பரிய விழாக்களில் ஒன்றான கார்த்திகை விளக்கீடான இன்று, பல்வேறு தடைகளையும் தாண்டி யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களால் தீபம் ஏற்றி அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை ஆறு மணியளவில் பல்கலைக்கழகத்திற்கு கார்த்திகை விளக்கீட்டினை அனுஷ்டிப்பதற்கு மாணவர்கள் வருகை தந்த நிலையில், பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியொகத்தர்களால் உள்நுழைய தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் பல்கலைக்கழகத்தில் ஆன்மீகரீதியான செயற்பாடுகளை மேற்க் கொள்ளவும் தடை விதிப்பதா என மாணவர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டு பல்கலைக்கழகத்திற்குள் சென்று கார்த்திகை விளக்கீட்டு தீபங்களை ஏற்றியுள்ளனர்.

அத்துடன், மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் புலனாய்வாளர்கள் வெளிநின்றமையை அவதானிக்கூடியதாக இருந்ததோடு இராணுவ மோட்டார் வாகனங்களும் காணப்பட்டது.

கடந்த வருடம் கார்த்திகை தீபம் ஏற்றியதற்காக யாழ் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழர்களின் பாரம்பரிய விழாக்களில் ஒன்றான கார்த்திகை விளக்கீடு பல்வேறு தடைகளையும் தாண்டி யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவர்களால் இடம்பெற்றது.

மாணவர்கள்

இந்நிலையில் பல்கலையில் ஆன்மீகரீதியான செயற்பாடுகளை மேற்கொள்ளவும் தடை விதிப்பதா என மாணவர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டு பல்கலைக்கழகத்திற்குள் சென்று கார்த்திகை விளக்கீட்டு தீபங்களை ஏற்றினர்.

கடந்த வருடம் ஒரு மாணவன் கோப்பாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டு பின் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

Leave a Reply