கொழும்பில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்

கொழும்பு – காலி முகத்திடலில் அதிசொகுசு காரொன்று தீபற்றி எரிந்துள்ளது.

குறித்த கார் நேற்றிரவு தீப்பற்றியுள்ளதுடன், கார் முழுமையாகவே தீக்கிரையாகியுள்ளது.

இதனையடுத்து கொழும்பு தீயணைப்பு பிரிவினர், தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை புறக்கோட்டை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Leave a Reply