2022-ல் சனியின் கோப பார்வை உங்க மேல விழக்கூடாதா? அப்ப மறக்காம இத செய்யுங்க…

2022 ஆம் ஆண்டு மிகவும் சிறப்பானது. ஏனெனில் இந்த ஆண்டில் முக்கியமான கிரக பெயர்ச்சிகளான குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சிகள் என பல நிகழ்கின்றன.

இதனால் பலரது வாழ்வில் பெரிய மாற்றங்கள் ஏற்படப் போகின்றன. அதோடு 2022 ஆம் ஆண்டு சனிக்கிழமை அன்று பிறக்கிறது. சனி பகவானுக்கு மிகவும் பிடித்த நாளான சனிக்கிழமை அன்று புத்தாண்டு பிறப்பதால், இந்த 2022 ஆம் ஆண்டு இன்னும் சிறப்பானதாக கருதப்படுகிறது.

பொதுவாக சனிக்கிழமைகளில் நாம் செய்யும் சில செயல்கள் அல்லது விஷயங்கள் சனி பகவானின் அருளைப் பெற உதவும். இந்த நாளில் நல்ல விஷயங்களை செய்தால், சனிபகவானின் பாச பார்வையைப் பெறலாம். அதுவே கெட்ட விஷயங்களை செய்தால், சனியின் கோபப் பார்வையை பெறக்கூடும்.

இப்போது 2022 ஆம் ஆண்டில் உங்கள் மீது சனியின் கோப பார்வை விழாமல் இருக்க புத்தாண்டின் முதல் நாளன்று செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாத விஷயங்களைக் காண்போம்.

சனிக்கிழமையில் வரும் 2022 ஜனவரி 01

பஞ்சாங்கத்தின் படி, ஜனவரி 01, 2022 சனிக்கிழமையில் வருகிறது. இந்த நாள் மார்கழி மாதத்தின் சதுர்த்தசி திதி ஆகும். மேலும் 2022 ஜனவரி 01 மாத சிவராத்திரியும் கூட. இந்நாளில் சிவபெருமானுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. மாத சிவராத்திரி தினம் சிவபெருமானுக்கு உரியதாக இருந்தாலும், சனிக்கிழமை என்பதால் இந்நாளில் சனி பகவானையும் வழிபடுவதும் நல்லது. பொதுவாக சனிக்கிழமைகளில் ஒருவர் சனிபகவானை வழிபட்டு வருவதன் மூலம், சனிபகவான் விரைவில் மகிழ்ச்சி அடைவார். எனவே சனி பகவானை வழிபட சிறந்த நாளாக சனிக்கிழமை கருதப்படுகிறது.

ஆண்டு முழுவதும் கிட்டும் சனி பகவானின் அருள்

பொதுவாக புதிய ஆண்டு தொடங்கும் போது ஆண்டின் முதல் நாளில் சுப காரியங்களை செய்தால், அந்த ஆண்டு முழுவதும் நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது ஓர் நம்பிக்கை. அதுவும் இந்த புத்தாண்டு சனிபகவானுக்கு உரிய சனிக்கிழமையில் வருகிறது மற்றும் இந்நாளன்று மாத சிவராத்திரியும் கூட. எனவே இந்த 2022 புத்தாண்டின் முதல் நாளில் சனி பகவான் மற்றும் சிவபெருமானை வழிபடுவது மிகவும் நல்லது. உண்மையில் சனி பகவான் சிவபெருமானின் தீவிர பக்தராவார். சனி பகவான் நீதிமான் என்பதால் தான் சிவபெருமான் நவகிரகங்களுக்கும் நடுவராக ஆக்கினார். ஆகவே 2022 புத்தாண்டின் முதல் நாளில் சனி பகவான் மற்றும் சிவ பெருமானை வழிபடுவதன் மூலம், அவர்களின் ஆசி ஆண்டு முழுவதும் கிடைக்கும்.

5 ராசிகளின் மீது சனியின் பார்வை

தற்போது 5 ராசிகளின் மீது சனியின் பார்வை உள்ளது. சனியின் தையா மிதுனம் மற்றும் துலாம் ராசியிலும், ஏழரை சனி தனுசு, மகரம், கும்பம் ஆகிய ராசிகளிலும் நடக்கிறது. ஆகவே ஜனவரி 01, 2022 அன்று சனிபகவானை இந்த 5 ராசிக்காரர்கள் வணங்கினால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

01 ஜனவரி 2022 புத்தாண்டு அன்று செய்ய வேண்டியவை

ஜனவரி 1, 2022 அன்று சனி பகவானை குளிர்விக்க பின்வரும் விஷயங்களை செய்யலாம். அவையாவன:

* சனி பகவான் கோவிலுக்கு சென்று சனி பகவானை வழிபடலாம்.

* கடுகு எண்ணெயை சனி பகவானுக்கு வழங்கலாம்.

* கருப்பு உளுத்தம் பருப்பை தானமாக வழங்கலாம்.

* கருப்பு நிற போர்வையை ஏழை எளியோருக்கு தானமாக வழங்கலாம்.

* சனி சாலிசா அல்லது சனி ஆரத்தியை சனிக்கிழமைகளில் பாராயணம் செய்யலாம்.

* நோயாளிகளுக்கு சேவை செய்யலாம்.

செய்யக்கூடாதவை

சனி பகவானின் கோபத்தைத் தவிர்க்க பின்வரும் விஷயங்களை ஒருவர் கட்டாயம் மனதில் கொள்ள வேண்டும். அவையாவன:

* கடினமாக உழைப்பவர்களை ஒருபோதும் காயப்படுத்தாதீர்கள்.

* கடினமாக உழைப்பவர்களை மதிக்க வேண்டும்.

* பொருளாதாரத்தில் பலவீனமாக இருப்பவர்களை ஒருபோதும் கேலி செய்யக்கூடாது.

* விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு தீங்கு செய்யாதீர்கள்.

* சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காதீர்கள்.

* போதைப் பழக்கம், தவறான சகவாசம் மற்றும் கெட்ட பழக்கங்களிலிருந்து விலகி இருங்கள்.

“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.

Leave a Reply