நான் நெருப்பு என்னை தீண்டவேண்டாம் -சர்வ மக்கள் கட்சி தலைவி உதயகலா! samugammedia

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் பிள்ளைகளைக்கொடுத்துவிட்டு அரசாங்கத்திடம் தமது பிள்ளைகளை கோருவதில் என்ன நியாயம் இருக்கின்றது என சர்வ மக்கள் கட்சியின் தலைவி  த.உதயகலா தெரிவித்தார்.

காணாமல்போனோர் சங்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் கட்டியுள்ள வீடுகள் தொடர்பான தகவல்களை இறைவரித்திணைக்களத்திடம் கொண்டுசெல்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துவருவதாக காணாமல்போனவர்கள் என்ற பெயரை வைத்துக்கொண்டு சுகபோகம் அனுபவித்துவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

யுத்தம் முடிந்து இத்தனை வருடங்கள் கடந்துள்ளபோதிலும் நீதிகொடுக்காத சர்வதேசம் இனிநீதிகொடுக்கும் என்ற நம்பிக்கையில் போராடுகின்றோமா ஒருபோதும் இல்லை,தமது வியாபார நோக்கத்துடனேயே போராடிவருகின்றோம்.

போராடுவதற்காக விடுதலைப்புலிகளின் தலைவரிடம் கொடுத்தவர்களை இன்று வேறு எங்கயோ காணாமல்போனவர்களிடம் தேடிவருகின்றனர்.குளத்தில்போட்டதை வேறு எங்கோ தேடிவருகின்றனர்.காணாமல்போனவர்கள் என்றால் ஆதாரத்தை தாருங்கள் சர்வதேச நீதிமன்றில் வழக்கு தாக்கல்செய்வோம்.

ஆர்ப்பாட்டங்கள் மூலம் மக்களை ஏமாற்றமுடியாது.இனி அதற்கு முடிவுகட்டும் காலம்வந்துவிட்டது.

காணாமல்போனோரை வைத்து சிலர் அரசியல் செய்கின்றனர், அரசினால் அவர்களுக்கு நஸ்ட ஈடு கொடுக்க அரசாங்கம் முற்பட்டால் அதை பெறுவதற்கு விடாமல் தடுக்கும் அதோ அரசியல்வாதிகள் கட்டும் கோமணம் கூட ஏதோ ஒரு வகையில் அது அரச சொத்தாகத்தான் இருக்கும்.

அரச பாதுகாப்புடன்தான் ஆர்ப்பாட்டங்களுக்கு இந்த அரசியல்வாதிகள் வருகின்றார்கள் இவர்களுக்கு வெட்கமில்லையா இவ்வாறு அரச நிதியை பயன்படுத்திக்கொண்டு மக்களை ஏமாற்றி புழைப்பு நடத்த, நான் மக்களுக்காக பாராளுமன்றம் சென்றால் நிச்சயமாக அந்த சம்பளத்தை நான் பெறமாட்டேன்.

இவர்கள் எத்தனை ஆர்பாட்டங்களை செய்தாலும் இவர்களால் இந்த நாட்டை சீரழிக்க எந்தவகையிலும் முடியாது. ஐனாதிபதி ரணில் நாட்டை நல்ல நிலைக்கு கொண்டுசெல்வார். அத்தோடு இந்த நாட்டு மக்கள் ரணில் விக்கிரம சிங்கவிற்கே வாக்களித்து மீண்டும் அவரையே ஜனாதிபதியாக தெரிவு செய்வார்கள் இதுவே உறுதி என்றார்.

Leave a Reply