மீண்டும் இராணுவ பாதுகாப்புடன் எரிபொருள் விநியோகம்! samugammedia

பெட்ரோலிய பொது சேவை சங்கத்தின் வேலை நிறுத்தம்  காரணமாக இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பில் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்காரணமாக கொலன்னாவை முனையத்தில் அதிகளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன்,  அங்கு பரபரப்பான சூழல் நிலவுகின்றது.

இதேவேளை, பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான கொலன்னாவை முனையத்திலிருந்து எரிபொருள் விநியோகம் நேற்று நண்பகல் முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளது. 

அத்துடன், தங்களின் தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளதாக பெட்ரோலிய பொது சேவை சங்கம் அறிவித்துள்ளது.

Leave a Reply