தவறான முடிவெடுத்து 29 வயது இளைஞன் உயிர்மாய்ப்பு! யாழில் சம்பவம் samugammedia

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, கலைவாணி வீதி, வடலியடைப்பு பண்டத்தரிப்பு பகுதியில் 29 வயது இளைஞன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

அவர் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமை புரிந்து வரும் நிலையில் சீருடையில் இருந்த கயிற்றினை பயன்படுத்தி தூங்கிட்டதாக அறிய முடிகிறது.

இன்றையதினம் அவர் இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். அதனைத் தொடர்ந்து இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த  பொலிசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Leave a Reply