தொல்லியல் திணைக்களத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் – வவுனியா வைத்தியசாலை அருகில் பதற்றம்!samugammedia

வவுனியா வெடுக்குநாறி மலையில் விக்கிரகங்கள் உடைத்தழிக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக ஆலயத்தின் நிர்வாகத்தினரால் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணிக்கு தற்போது நடைபெற்று வருகின்றது.

குறித்த ஆர்ப்பாட்ட பேரணி இன்று காலை 10 மணியளவில் வவுனியா கந்தசாமி ஆலயவளாகத்தில் ஆரம்பமாகியிருந்ததுடன் தற்போது தொல்லியல் திணைக்களத்தில் வளாகத்திற்கு நுழைந்து கோசங்களை எழுப்பிய நிலையில் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தள்ளார்.

வவுனியா வைத்தியசாலையின் சுற்றுவட்டாரத்தில் தொல்லியல் திணைக்களத்தின் அலுவலகம் அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply