ஹம்பாந்தோட்டை – மயூரபுர பிரதேசத்தில் 12 வயது மாணவியொருவரை விடுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த மாணவியின் தந்தை செய்த முறைப்பாட்டின் பிரகாரம் ஹம்பாந்தோட்டை துறைமுக காவல்துறையினரால் சந்தேகநபரான ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்
கடந்த 28ஆம் திகதி பாடசாலைக்குச் செல்வதாகக் கூறிச்சென்ற குறித்த சிறுமி வீடு திரும்பாததால் அவரது தந்தை இது குறித்து விசாரித்துள்ளார்.
அதன்போது, குறித்த மாணவி பல்லகஸ்வெவ சந்தியில் மகிழுந்து ஒன்றில் ஏறிச் செல்வதைக் சிலர் கண்டதாக தெரியவந்துள்ளது.
அதற்கமைய, மாணவியை தேடி பெற்றோர் பல்லகஸ்வெவ சந்திக்கு சென்றபோது, அவர் வீடு திரும்பியுள்ளார்.
பின்னர், அவரிடம் நடத்திய விசாரணையின்போது, சந்தேகநபரான ஆசிரியர் தன்னை விடுதியொன்று அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்ததாக மாணவி தெரிவித்துள்ளார்.