யாழில் மாடுகளுக்கு ஊசிபோட பயன்படும் இந்து பாடசாலைகள்- ஆறு திருமுருகன் அதிர்ச்சித் தகவல்!samugammedia

இந்து பாடசாலைகள் அண்மைக்காலமாக மூடப்பட்டு வருவதாகவும், குறிப்பாக தீவகத்தில் சைவ பாரம்பரிய பாடசாலைகள் மூடப்படுவதாகவும் சிவ பூமி அறக்கட்டளையின் தலைவர், கலாநிதி ஆறு திருமுருகன் ஆறு திருமுருகன் குற்றம் சுமத்தியுள்ளார்.

நல்லை ஆதீனத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற சைவ சமயத்திற்கு எதிராக அடக்குமுறை தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியிருந்தார்.

அத்துடன், மூடப்படும் பாடசாலைகள் சைவ மக்களுக்கு தெரியாமல் வேறு திணைக்களங்களிடம் ஒப்படைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பூதர் மடத்திலுள்ள சைவ பாடசாலை மாடுகளுக்கு ஊசிபோட பயன்படுத்தப்படுவதாகவும், கந்தர்மடம் சைவப்பிரகாச பாடசாலையின் ஒருபகுதி நல்லூர் திருவிழா காலங்களில் பொலிஸ் நிலையமாக பயன்படுத்தப்படுவதாகவும் ஆறு திருமுருகன் தெரிவித்தார்.

Leave a Reply