புத்தளம் பாலாவி நாகவில்லு பகுதியில் இன்று நண்பகல் வீடொன்றில் பீடி இலகளை பொதி செய்யப்பட்டு லொறியொன்றில் ஏற்றுவதற்கு தயாராக இருந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தம்பபண்ணி கடற்படைப் பிரிவினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய புத்தளம் பொலிஸாருடன் இனைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இந்த நிலையில் பீடி இலைகளை விற்பனை செய்வதற்கு மேற்கொண்ட சிலர் தப்பியோடியதாகவும் பீடி இலைகளை கொள்வனவு செய்வதற்கு வருகைத் தந்த ஹட்டன் மற்றும் முல்லைத்தீவு பகுதிகளைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.
44 பெட்டிகளில் அடைக்கப்பட்ட நிலையில் சுமார் 1157 கிலோ கிராம் 700 கிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டதாகவும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லொறியொன்றைக் கைப்பற்றியதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.
குறித்த பீடி இலைகள் இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்டிருக்கலாமென சந்தேகிப்பதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் சுமார் 1 கோடி ரூபாவிற்கும் அதிக பெருமதியென கடற்படையினர் இதன் போது தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுடன் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் பீடி இலைகளைக் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட லொறியையும் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக தம்பபண்ணி கடற்படைப் பிரிவினர் தெரிவித்தனர்.
மேலதிக, விசாரணைகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருவத புத்தளம் பொலிஸார் இதன்போது தெரிவித்தனர்.