பிரபல ஹாலிவூட் நடிகரான கிறிஸ்டியன் இலங்கை வருகை!samugammedia

ஹாலிவூட்டில் பழம்பெரும் நடிகரான கிறிஸ்டியன் நேற்றையதினம்(04)  இலங்கைக்கு வருகை தந்தார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

விருது பெற்ற ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் பேலுக்கு, கொழும்பில் இருந்து மாலே செல்லும் ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் விமானமான UL 115 இல் ஏறியபோது அவருக்கு அமோக வரவேற்பு கிடைத்தது.

“இது ஒரு மறக்க முடியாத இலங்கை அனுபவத்தை வழங்க முடிந்த ஒரு அற்புதமான வாய்ப்பாகும்.” UL 115 ஊழியர்கள் தெரிவித்தனர் .

கிறிஸ்டோபர் நோலனின் பேட்மேன் திரைப்பட முத்தொகுப்பில் பேட்மேனாக நடித்ததன் மூலம் கிறிஸ்டியன் பேல் இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் மத்தியில் பிரபலமானமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply