450 அரச நிறுவனங்கள் தொடர்பில் நிதி அமைச்சு வெளியிட்ட அதிர்ச்சித் தகவல் samugammedia

அரச நிறுவனங்களை மறுசீரமைப்பு செய்யும் நடவடிக்கைகளில் எத்தகைய அரசியல் தலையீடுகளும் கிடையாது. தேசிய நிறுவனம் ஒன்றின் மூலமே அது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என  நிதி இராஜங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் எழுப்பப்பட்ட   நிலையியற் கட்டளை 27ன் கீழ் 2 கேள்விக்குப் பதில் அளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்,

கடந்த பத்து வருடங்களில் 450 அரச நிறுவனங்கள் நட்டத்திலேயே இயங்கி வந்துள்ளன. 2012 ஆம் ஆண்டில் 183 பில்லியன் 2013 ஆம் ஆண்டு 186 பில்லியன் 2014 ஆம் ஆண்டு 186 பில்லியன் என நட்டம் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் 2015 ஆம் ஆண்டு 271 பில்லியன் 216 ஆம் ஆண்டு 180 பில்லியன் 217 ஆம் ஆண்டு 260 பில்லியன் 2018 ஆம் ஆண்டு 265 பில்லியன் 2019 ஆம் ஆண்டு 268 பில்லியன் என இந்த நிறுவனங்கள் நட்டத்தில் இயங்கியுள்ளன.

அந்த வகையில் 2020 ஆம் ஆண்டு 436 பில்லியன் 2021 ஆம் ஆண்டு மற்றும் 2022 ஆம் ஆண்டில் முறையே 337 பில்லியன் மற்றும் 322 பில்லியன் என இந்த நிறுவனங்கள் மூலம் நட்டம் ஏற்பட்டுள்ளது.

எனவே அரச நிறுவனங்களை மறுசீரமைப்பு செய்யும் நடவடிக்கைகளில் எத்தகைய அரசியல் தலையீடுகளும் கிடையாது. தேசிய நிறுவனம் ஒன்றின் மூலமே அது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

நிதியமைச்சின் கீழ் செயற்படும் மேற்படி நிறுவனம் தொழில் ரீதியாக பணிப்பாளர் சபையின் கீழ் நிறுவனங்கள் சட்டத்தின் நியமங்களின் படி உரிய நிர்வாகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்றார்.

Leave a Reply