
நீர்கொழும்பு -படல்கம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹல்பே பகுதியில் ஓமான் முதலீட்டாளர் ஹல்பான் அல் உபைதி மீது இராஜாங்க அமைச்சர் ஒருவரின் அரசியல் அதிகார பின்னணி கொண்ட கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியமை மற்றும் அவரது ஆடை தொழிற்சாலை மீதான தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் தொடர்பில் சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிறப்புக் குழுவொன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.