யாழில் ஐந்து பிள்ளைகளை பெற்றெடுத்த தம்பதிகளுக்கு கௌரவம்!samugammedia

ஐந்து பிள்ளைகளை பெற்றிடுத்த திரு திருமதி  கடம்பன் தம்பதிகளுக்கு அகில இலங்கை சைவ மகாசபை கௌரவமளித்துள்ளது.

பங்குனி உத்திர நன்னாளான நேற்றையதினம் 4வது, 5வது குழந்தை பெற்றெடுக்கும் தமிழில் பெயர் வைக்கும் குடும்பங்களை ஊக்கப்படுத்தும் செயற்றிட்டத்தை  சைவ மகா சபையின் சைவ அறப்பணி நிதியம் ஊடாக ஆரம்பித்து வைத்துள்ளது.

சமய, சமூக, மது ஒழிப்பு செயற்பாட்டாளரான சாந்தை பண்டதரிப்பை சார்ந்த கடம்பன் அசுவினி தம்பதியினருக்கு 5வது குழந்தை சிவாத்மிகலனை பெற்றெடுத்தமைக்காகவே  ஊக்க தொகை மற்றும் சத்துமா என்பன சைவ மகா சபை தலைவர் சிவத்திரு சண்முகத்தினத்தினால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

5வருடங்களிற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் கொரோனா பொருளாதார நெருக்கடியால் சிறிது காலம் தடைப்பட்டு இருந்தது.

இத்திட்டத்திற்கு பங்களிக்க விரும்பும் நல்லுள்ளங்கள் சைவ அறப்பணி நிதிய வங்கி கணக்கு ஊடாக உதவ முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply