ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு…!samugammedia

பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற சிரேஷ்ட நிர்வாக அதிகாரி சனத் ஜயந்த எதிரிவீரவை நியமிக்க அரசியலமைப்பு பேரவை முன்வைத்த பரிந்துரைக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒப்புதல் அளித்துள்ளார்.

ஆணைக்குழுவின் ஏனைய ஆறு உறுப்பினர்களை நியமிக்கும் அரசியலமைப்பு பேரவையின் பரிந்துரையையும் ஜனாதிபதி அங்கீகரித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, சிரேஷ்ட நிர்வாக அதிகாரி சனத் ஜயந்த எதிரிவீரவின் தலைமையிலான பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக, சித்தி மரீனா மொஹமட், நரசிங்க ஹேரத் முதியான்சேலாகே சித்திரானந்த, பேராசிரியர் நாகநாதன் செல்வகுமாரன், மாணிக்க படதுருகே ரோஹன புஷ்பகுமார, டொக்டர் அங்கம்பொடி தமித்த நந்தனி டி சொய்சா, ரஞ்சனி நடராஜப்பிள்ளை, பல்லேகம சந்திரத்ன பல்லேகம ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply