
வழமையான மாதங்களை விட உயர்வான ஒரு மாதமாக இதோ ரமழான் எங்களை வந்தடைந்து மிக வேகமாக எங்களை விட்டும் கடந்து சென்று கொண்டிருக்கிறது. அல்குர்ஆன் இறங்கப்பட்ட இந்த அற்புத மாதத்தின் ஒவ்வொரு நிமிடமும் பெறுமதியானது. ஆனால் ஏனோ நாம் தான் அதன் பெறுமதி உணராது செயற்பட்டுக் கொண்டிருக்கிறோம்.