பெண் அதிபர் தான் வேண்டும்..! சாய்ந்தமருதில் போராட்டம் முன்னெடுப்பு..!samugammedia

பெண் பாடசாலை அதிபர் தான் வேண்டும் ஆண் பாடசாலை அதிபர் வேண்டாம் என போராட்டம் ஒன்றினை கடும் வெயில் மத்தியில்  சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஷம்ஸ் மகா வித்தியாலய  பழைய மாணவர் அமைப்பின் ஏற்பாட்டில்  முன்னெடுத்தனர்.

இன்று(8) கல்முனை கல்வி வலய  சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஷம்ஸ் மகா வித்தியாலயத்திற்கு புதிய  அதிபர் எம்.எஸ். நபார் என்பவர் நியமிக்கப்பட்ட  செய்தி பரவியதை  அடுத்து குறித்த பாடசாலையின் முன்பாக பழைய மாணவர்கள் மாணவர்களின் பெற்றோர்கள்  போராட்டமொன்றை முன்னெடுத்தனர். 
 
இதன் போது கடந்த காலங்களில் முறையான நிர்வாகமின்றி பல்வேறு அநாகரிக விடயங்கள் இடம்பெற்று வந்த இப்பாடசாலையை பொறுப்பேற்று வினைத்திறனுடன் திறன்பட நிர்வாகித்து வந்த பாடசாலை அதிபர் எம்.சி. நஸ்லின் றிப்கா அன்சார் என்பவரை  கடமை செய்ய விடாமல் ஒரு தரப்பு  தடுத்து வருவதாகவும்  புதிய  அதிபர் எம்.எஸ். நபார் என்பவரை நியமித்து  பாடசாலைக்கு பூட்டுக்களை பூட்டி   தொடர்ந்தும் இடையூறுகளை செய்து வருவதாகவும்   போராட்டத்தில்   ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டனர்.
இந்த போராட்டத்தில் சாய்ந்தமருது கல்வி பாரம்பரியத்தை சாய்ப்பதற்கு திட்டமா?பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் ஓய்வு எடுக்கும் இடமா?ஏழைகளின் கல்வியில் கல்லை எறியாதே வேண்டாம் பாடசாலை கல்வியை குழப்ப வேண்டாம் என்ற வாசகங்களை அடங்கிய சுலோகங்களை போராட்டக்காரர்கள் ஏந்தி கோஷங்களை எழுப்பினர் 
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாய்ந்தமருது  பொலிஸார்    சுமூக நிலைக்காக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை அவதானிக்க முடிந்ததுடன்  பெண் பாடசாலை அதிபர் இடமாற்றம் செய்யப்பட்டால் நாங்கள் எங்களின் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப மாட்டோம் என்றும் ஊடகங்களிடம்  குறிப்பிட்டனர்.

Leave a Reply