மட்டுப்படுத்தப்பட்ட அரசியல் உரிமைகளும் பறிபோகும் அபாயம்: கிளிநொச்சி பிரஜைகள் குழு கவலை…! samugammedia

அரசியலமைப்பில் உள்ள மட்டுப்படுத்தப்பட்ட அரசியல் உரிமைகளைக்கூட பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்  பறித்தெடுப்பதற்கான உள்நோக்கங்களைக் கொண்டிருக்கின்றது என கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழுவின் செயலாளர் எஸ். ஜீவநாயகம் தெரிவித்துள்ளார்.

புதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் அவர் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் சிவில் சமூகமோ, மனித உரிமை ஆர்வலர்களோ, ஊடகவியலாளர்களோ, சிறுபாண்மை இனமோ அல்லது நல்லாட்சியை விரும்புகின்ற மக்கள் குழுவினரோ அரசுக்கெதிரான மாற்றுக்கருத்துக்களை முன்வைக்கின்ற செயற்பாடுகளை கட்டுப்படுத்துகின்ற அல்லது இல்லாதொழிக்கின்ற சர்வாதிகாரத்தை நிலைநிறுத்துகின்ற சட்டமாகவே இந்த பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டமூலம் காணப்படுகின்றது என்றும் கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழுவின் செயலாளர் எஸ். ஜீவநாயகம் தெரிவித்தார்.

குறிப்பாக 1979 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத்திற்கு எதிரான தடைச்சட்டம் இன்றைய பொருளாதார நிலைமைக்கு முக்கியமான அடித்தளத்தையிட்டிருக்கின்றது எனவும் பயங்கரவாதம் என்ற போர்வையில், ஒட்டுமொத்த நாட்டு மக்களையும், ஒரு சிறுபாண்மை மக்களையும் அந்த மக்களிற்கு எதிராக அந்த ஆட்சித் துறை நிர்வாகம் கட்டுப்படுத்தி துன்பத்துக்கு உள்ளாக்கியிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், புதிய சட்டத்தை அரசாங்கம் கொண்டுவர முயற்சிப்பதாகவும், இது ஒட்டுமொத்த நாட்டினுடைய ஜனநாயகத்திற்கு விழுந்த ஒரு பாரிய அடியாகவே பார்க்கின்றோம் என்று எஸ். ஜீவநாயகம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply