சிங்களவர்களை அடிமைகளாகும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் : சிறீதரன் எம்.பி. வெளியிட்டுள்ள தகவல்! samugammedia

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமானது சிங்கள இளைஞர்களையும் சிங்கள மக்களையும் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும்,  சிங்கள இனத்தையே அடிமைப்படுத்தப்போகின்ற ஒரு சட்டமாக இது அமையும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

விளையாட்டு போட்டி நிகழ்வொன்றில் கலந்துகொண்டபோது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனை தெரிவித்தார்.

இந்த சட்டத்துக்கு எதிர்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில் தற்காலிகமாக இது ஒத்திவைக்கப்பட்டுள்ளதே தவிர, இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்வதாக சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை முழுமையாக எதிர்ப்பதாகவும், என்ன விலை கொடுத்தாயினும் இந்த சட்டத்தை நீக்குவதற்கு முழு முயற்சியை எடுப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், உலகத்தை ஏமாற்றுவதற்காகவே பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் கொட்டுவரப்படுவதாகவும், இது பயங்கரவாத தடைச்சட்டத்தை விடவும் மிகவும் மோசமானது எனவும் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

Leave a Reply