மஹிந்தவின் வீட்டில் அதிரடியாக குடிபுகுந்த ரணில்…! பகிரங்கப் படுத்திய மைத்திரி தரப்பு…!samugammedia

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மையத்தில் மஹிந்த ராஜபக்ஷ இருந்த இடமே இன்றைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் ஷான் விஜேலால் டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியை விடவும் இன்று ரணில் விக்கிரமசிங்கவை மக்கள் ஜனாதிபதியாக்கப் போராடுவது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே என அவர் கூறுகிறார்.

அம்பலாங்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்,

 ரணில் விக்கிரமசிங்கவின் தோளில் தொங்கி ஆட்சிக்கு வருவதே அந்த குழுவினரின் எதிர்பார்ப்பு எனவும் தெரிவித்தார்.

அப்போது ரணிலை விரட்டியடிக்கப் போராடியவர்களே ரணிலை மீண்டும் ஜனாதிபதியாக்க பெரும் முயற்சிகளை மேற்கொள்வதாகத் தெரிகிறது என்றும் ஷான் விஜயலால் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply