புத்தளம் கல்லடி பகுதியில் 21வயது இளைஞன் சடலமாக மீட்பு..!samugammedia

புத்தளம் கல்லடி நெழும்வெவ பகுதியில் ஆணொருவரின் சடலமொன்று நேற்றிரவு(11) மீட்கப்பட்டுள்ளது.

சிலாபம் ஆராச்சிக்கட்டுவ பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளம் ஆணொருவரின் சடலமே இவ்வாறு அடையாளம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவ இடத்திற்கு கல்லடி பகுதிக்கான திடீர் மரண விசாரணை அதிகாரி வருகை தந்து சடலத்தைப் பார்வையிட்டார்.

சம்பவம் தொடர்பில் புத்தளம் நீதிமன்ற நீதவானுக்கு அறிக்கை சமர்பிக்க உள்ளதாக அவர் இதன்போது தெரிவித்தார்.

குறித்த சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்படுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தமைக்கான  காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் புத்தளம் பொலிஸார் மற்றும் தடவியல் பொலிஸாரும் தெரிவித்தனர்.

Leave a Reply