முல்லைத்தீவு சட்டவிரோத முன்பள்ளி..!வலயக்கல்வி திணைக்களத்திடம் அறிக்கை கோரும் பிரதேச செயலகம்!samugammedia

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள “நொக்ஸ் ” என்ற பெயரில் இயங்கும் கிறிஸ்தவ முன்பள்ளியின் அனுமதி தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிமணையிடம்  கோரிக்கை முன்வைத்துள்ளது.

 குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,
முல்லைத்தீவு வலயக்கல்விப் பணிமணையின் உரிய அனுமதிகள் இன்றி கிறிஸ்தவ மத பிரிவினரால் நொக்ஸ்  என்ற சிறுவர் இல்லம்  செயல்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.
 புதுக்குடியிருப்பு வற்றாப்பளை வீதியில் அமைந்துள்ள குறித்த முன்பள்ளியானது முன்பள்ளி என்ற போர்வையில் மதமாற்ற செயற்பாடுகள் இடம்பெறுவதாக குற்றம் சாட்டப்படுகிறது.
 அதுமட்டுமல்லாது  வெளி மாகாணங்களில் இருந்து சிறுவர் சிறுமிகள் அழைத்து வரப்பட்டு கட்டாய மதமாற்றத்திற்கு நிர்பந்திக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
குறித்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்கு முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளர் தமிழ் மாறனை அலுவலக இலக்கத்திற்கும் பிரத்தியோக இலக்கத்துக்கும் தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
இந்நிலையில் புது குடியிருப்பு பிரதேச செயலாளர் ஜெயக்காந்தனை தொடர்பு கொண்டு கேட்டபோது குறித்த விடயம் தொடர்பில் முல்லைத்தீவு வலயக் கல்வி பணிமனையிடம் அறிக்கை தருமாறு கூறியுள்ள நிலையில் அறிக்கை கிடைத்ததும் மேலதிக விவரங்களை அறிந்து கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply