ரத்மல்யாய பகுதியிலிருந்து புத்தளம் நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி வேகக் கட்டுப்பாட்டை இலந்து வீதியை விட்டு விலகி பாலத்தின் மேல் மோதூண்டு குடை சாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது முச்சக்கர வண்டியின் சாரதி பலத்த காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் அங்கிருந்தவர்களினால் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
விபத்து சம்பவம் தொடத்பில் மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.

