மக்களைக் காப்பாற்றிய ரணிலை மீண்டும் ஜனாதிபதியாக்குவோம்-வஜிர வேண்டுகோள்…!samugammedia

‘இலங்கை மக்களைப் பட்டினிச் சாவிலிருந்து காப்பாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் ஒரு தடவை ஜனாதிபதியாகத் தெரிவு செய்ய வேண்டும். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் அவரைத் தேசிய சொத்தாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.’என  ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன. வலியுறுத்தினார்

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

‘ஆர்ப்பாட்டம்,உணவு நெருக்கடி,எரிவாயு மற்றும் எரிபொருள் வரிசை யுகத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்வே முற்றுப்புள்ளி வைத்தார்.

விவசாயிகள் ஒருபுறம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஜனாதிபதியாகப் பதவியேற்ற சிறிது காலத்திலேயே அனைத்துப் போராட்டங்களுக்கும் ஜனாதிபதி தீர்வு கண்டார்.

எனவே, அடுத்த தேர்தலில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவாராயின் மக்கள் அவரை தேசிய சொத்தாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.’ – என்றார்.

Leave a Reply