இலங்கையிலிருந்து சீனாவிற்கு செல்லும் குரங்குகளின் செல்பி தொகுப்பு…! வைரலாகும் புகைப்படங்கள்…!samugammedia

இலங்கையிலுள்ள குரங்குகளுக்கு சீனாவில் அதிக கேள்வி காணப்படுவதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேவேளை இலங்கையில் குரங்குகளில் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து செல்கின்ற நிலையில் அதற்கு தீர்வாக இலங்கை குரங்குகளை சீனாவிற்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த கேள்விக்கு அமைய, இலங்கையிலுள்ள ஒரு லட்சம் குரங்குகளை சீனாவிற்கு வழங்குவது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று சில தினங்களுக்கு முன்னர் பத்தரமுல்லையிலுள்ள விவசாய அமைச்சில் நடைபெற்றது.

இவ்வாறானதொரு நிலையில் சமூகவலைத்தளங்கள் எங்கும் இலங்கைக் குரங்குகள் சீனா செல்லவுள்ளமை தொடர்பில் பல்வேறுபட்ட கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இலங்கை குரங்குகள் விமான நிலையத்தில் செல்பி எடுப்பது மற்றும் விமானத்தில் பயணம் செய்வது போன்ற புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply