முஸ்லீம் மற்றும் சிங்கள மக்களுக்கு இடையில் சகவாழ்வை ஏற்படுத்துவதற்கு தற்போது சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக திருகோணமலை மஹதிவுல்வௌ பப்பதாராம விகாரையின் விகாரதிபதி சீல விசுத்தி தெரிவித்துள்ளார்.
ரொட்டவௌ மஸ்ஜிதுகள் {ஹதா ஜும்மா பள்ளிவாசலுக்கு இன்று விஜயம் மேற்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
நோன்பு மாதத்தை கௌரவிக்கும் முகமாக சித்திரை புத்தாண்டு தினத்தில் நோன்பு நோற்கும் நோன்பாளிகளுக்கு இலவசமாக கஞ்சி கொடுக்க வேண்டும் என்ற யோசனை வந்ததாகவும்,
இதனை எப்படி கொடுப்பது என தெரியாத போது மொரவௌ சிவில் சமூக அமைப்பு தனக்கு வழிகாட்டியாக இருந்ததாகவும் விகாராதிபதி சீல விசுத்தி இதன்போது தெரிவித்தார்.
நாங்கள் சிங்கள புத்தாண்டு வருடத்தை கொண்டாடி வருகின்றோம். இதே நேரம் நோன்பை நோக்கும் முஸ்லிம் சகோதரர்களும் இருக்கிறார்கள். சகவாழ்வை ஏற்படுத்துவதற்கு இது ஒரு சந்தர்ப்பமாக காணப்படுகின்றது. இதன் அடிப்படையில் நான் யோசித்தேன்.
புத்தாண்டு தினத்தில் நோன்பு திறக்கும் நேரத்தில் இலவசமாக கஞ்சி கொடுக்கும் நடைமுறையை இம்முறை பின்பற்ற வேண்டும் என யோசித்தேன். அதன் அடிப்படையில் இன்றைய தினம் பள்ளிவாயலுக்கு வருகை தந்தேன் எனவும் மஹதிவுல்வௌ பப்பதாராம விகாரையின் விகாரதிபதி சீல விசுத்தி தெரிவித்தார்.