மைத்திரியின் வீட்டில் ஏற்பட்ட குழப்பம்: முக்கிய நிகழ்வை புறக்கணிக்க தயாராகும் எம்.பிகள்!samugammedia

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 11 பாராளுமன்ற உறுப்பினர்கள் மே தினக் கொண்டாட்டத்தைப் புறக்கணிக்க உள்ளதாக வெளியான செய்தியை நிராகரிப்பதாக கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கட்சியின் கொள்கைக்கு புறம்பாக செயற்படும் ஒன்பது பாராளுமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இவர்களே பங்கேற்காதிருக்க கூடும்.

சு.கவின் மே தின கூட்டமானது கண்டியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெருந்தொகையான ஆதரவாளர்கள் பங்கேற்பார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

கட்சியின் முக்கிய தலைவர்களும், அமைப்பாளர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply