அன்னை பூபதியின் 35 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இரண்டாம் நாள் நிகழ்வு யாழ் பல்கலையில் அனுஸ்டிப்பு!samugammedia

இந்தியப் படைகளால் தமிழர் தாயகத்தில் வலிந்து திணிக்கப்பட்ட போரையும் அடாவடிகளையும் நிறுத்த வலியுறுத்தி மட்டக்களப்பு மண்ணில் உண்ணாவிரத அறப்போர் புரிந்து காந்தி தேசத்திற்கே அகிம்சையைப் போதித்து தன்னுயிர் நீத்த அன்னை பூபதியின் உண்ணாவிரத அறப்போராட்டத்தின் 35ஆம் ஆண்டு நினைவேந்தலின் இரண்டாம் நாள் நிகழ்வுகள்  இன்று(13) காலை  யாழ் பல்கலைக்கழகத்தில் பல்கலை மாணவர்களால் உணர்வுபூர்வமாக நினைவேந்தப்பட்டது.

யாழ் பல்கலை மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற நினைவேந்தலில்  பல்கலை மாணவர்களால் மலரஞ்சலி மற்றும் ஒருநிமிட அகவணக்கமும் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply