புதுவருடப்பிறப்பை முன்னிட்டு ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள்

மலர்ந்திருக்கும் சோபகிருது வருடப்பிறப்பை முன்னிட்டு, இலங்கையின் பல்வேறு இடங்களில் உள்ள ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் சோபகிருது வருடப்பிறப்பை முன்னிட்டு இன்று காலை முருகப் பெருமானுக்கு விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து வள்ளி – தெய்வானை சமேதரராக வேற்பெருமான் வெள்ளி மயில் மீதினில் உள்வீதி மற்றும் வெளிவீதியில் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

யாழில் மட்டுமன்றி, நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள ஆலயங்களிலும் விசேட பூஜை வழிபாடுகள் இன்று இடம்பெற்றன.

மலர்ந்திருக்கும் சோபகிருது வருடப்பிறப்பை முன்னிட்டு, மருத்து நீராடியும் இறைவழிபாட்டை மேற்கொண்டும், பக்தர்கள் தங்களின் புத்தாண்டை இனிதே ஆரம்பித்தனர்.

Leave a Reply