கிணற்றில் விழுந்த சிறுவன்..! பரிதாபமாக பறிபோன உயிர்!samugammedia

பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த சம்பவம் கஹட்டகஸ்திகிலிய நெகுடவெவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் வசிக்கும்  16 வயதுடைய சிறுவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தனது வீட்டிற்கு அருகில் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த வேளை  கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளதாக  பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சிறுவன் கிணற்றில் விழுந்த சமயம்  பாதுகாப்பற்ற கிணற்றில் தண்ணீர் நிறைந்திருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த சிறுவனின் சடலம் கஹட்டகஸ்திகிலிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Leave a Reply