அன்னை பூபதியின் உண்ணாவிரத அறப்போராட்டத்தின் இறுதி வார 4ஆம் நாள் நினைவேந்தல் யாழ் பல்கலையில் அனுஸ்டிப்பு!samugammedia

இந்தியப் படைகளால் தமிழர் தாயகத்தில் வலிந்து திணிக்கப்பட்ட போரையும் அடாவடிகளையும் நிறுத்த வலியுறுத்தி மட்டக்களப்பு மண்ணில் உண்ணாவிரத அறப்போர் புரிந்து காந்தி தேசத்திற்கே அகிம்சையைப் போதித்து தன்னுயிர் நீத்த அன்னை பூபதியின், உண்ணாவிரத அறப்போராட்டத்தின் இறுதி வார  4ஆம் நாள் நினைவேந்தல் இன்று (15.04.2023) சனிக்கிழமை யாழ் பல்கலை மாணவர்களால் உணர்வுபூர்வமாக நினைவேந்தப்பட்டது.

அன்னை பூபதியின் நினைவேந்தல் 35ஆம் ஆண்டு நினைவேந்தல் தமிழர் தாயகம் உள்ளிட்ட தமிழர் வாழும் தேசம் எங்கும் இவ்வருடம் நினைவேந்தப்பட்டுக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply