மகளை தேடிய தந்தை மரணம்: தொடரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் துயரங்கள்!samugammedia

இறுதி யுத்தத்தின்போது காணாமல் ஆக்கப்பட்ட மகளை தேடிவந்த தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த கணபதி கந்தையா என்பவரே தனது மகளை இறுதிவரை காணாமல் உயிரிழந்துள்ளார்.

இறுதி யுத்தத்தின்போது காணாமல் ஆக்கப்பட்ட திருவா கந்தையா என்ற மகளை தேடிவந்த இந்த தந்தை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உறவுகளின் போராட்டங்களிலும் பங்கேற்றிருந்தார்.

இவ்வாறு தமது உறவுகளை தேடி அலையும் பலர் நோய்வாய்ப்பட்டும், வயது மூப்பாலும் தொடர்ச்சியாக உயிரிழக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply