திருமலை அலஸ்தோட்டம் கடற்கரையில் ஆணொருவரின் சடலம் மீட்பு!samugammedia

திருகோணமலை அலஸ்தோட்டம் கடற்கரையில் ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டிலிருந்து நேற்றையதினம் (14)மாலை சென்ற நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது

இவ்வாறு  சடலமாக மீட்கப்பட்டவர் சாம்பல்தீவு-சல்லி வாட்டு இலக்கம் 02 யைச்சேர்ந்த ராஜலிங்கம் பிரபாகரன் (38 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அலஸ்தோட்டம் கடற்கரையில் மீக்கப்பட்ட சடலத்தை திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் பார்வையிட்டதையடுத்து பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை பொது வைத்தியசாலைக்கு சடலத்தை கொண்டு செல்லுமாறும் பொலிஸாருக்கு கட்டளையிட்டார்.

இதனை அடுத்து சடலத்தை கொண்டு சென்று பிரேத பரிசோதனை முடிவுற்ற பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் மரணம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply