
நாட்டின் அரசியலமைப்பையும் சட்டத்தையும் மீறும் வகையில் அண்மைக்காலமாக பொலிசார் நடந்து கொள்வதானது பலத்த விசனத்தைத் தோற்றுவித்துள்ளது. நாட்டு மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க கடமைப்பட்ட பொலிசார், தமது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்யும் வகையில் நடந்து கொள்வதானது கண்டிக்கத்தக்கதாகும்.