வவுனியா நையினாமடுவில் கோர விபத்து- ஒருவர் உயிரிழப்பு! samugammedia

வவுனியா நையினாமடு பகுதியில் இன்று (16.04) இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலியானதுடன் அவரது மனைவி காயமடைந்துள்ளார்.

நெடுங்கேணி பகுதியில் இருந்து வவுனியா நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்த செட்டிகுளம்  கப்பாச்சியை சேர்ந்த 23 வயதுடைய ராமலிங்கம் அனுசன் மற்றும் அவரது மனைவி முன்னாள் சென்றுகொண்டிருந்த பட்டா ரக வாகனத்தில் பின்புறமாக மோதுண்டுள்ளனர்.

இதன் காரணமாக மோட்டார் சைக்கிளை செலுத்திய அனுசன் பலத்த காயமடைந்து மரணமடைந்ததுடன், மனைவி சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளார். 

இவ் விபத்து தொடர்பாக புளியங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

Leave a Reply