சுகாதாரத்துறை எதிர்நோக்கியுள்ள பாரிய சிக்கல்: அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அதிர்ச்சித் தகவல்! samugammedia

மருந்து பொருட்களுக்கான தட்டுப்பாடு மற்றும் மருந்து வகைகளின் விலையேற்றத்துக்கு உடனடியாக தீர்வு ஒன்று வழங்கப்படவேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்  கோரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது கருத்து வெளியிட்ட  அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் ஹரித அலுத்கே இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், 

பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் காரணமாக வரலாற்றில் எந்தவொரு காலத்திலும் முகம்கொடுக்காத நெருக்கடிகளுக்கு சுகாதாரத்துறை முகம் கொடுத்திருந்தது. ஒரு பக்கம் மருந்துகளுக்கு தட்டுப்பாடு இன்னொரு பக்கம் மருந்து பொருட்களுக்கான விலை ஏற்றம் ஆகிய பிரச்சினைகளுடனேயே நாம் பழைய வருடத்தை பூர்த்தி செய்தோம்.

இதேவேளை, நாட்டில் மந்த போசனை வீதமும் அதிகரித்துள்ளது. இதற்கிடையில் மருத்துவமனை கட்டமைப்புகளிலும் பாரிய அளவு வீழ்ச்சியினை சந்திக்க நேரிட்டுள்ளது. குறிப்பாக பல வைத்தியர்கள் இன்று நாட்டைவிட்டு வெளிநாடுகளுக்கு செல்கின்றனர்.

எவ்வாறாயினும் புதிய வருடத்தில் எமக்கு புதிய எதிர்பார்ப்புகள் காணப்படுகின்றன. எனவே இந்த புதிய வருடத்திலாவது குறித்த பிரச்சினைகள் தீர்க்கப்படும் என எதிர்பார்க்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply