அதிவேக நெடுஞ்சாலைகளினூடாக 48 மணிநேரத்தில் 7 கோடி ரூபா வருமானம்!samugammedia

அதிவேக நெடுஞ்சாலைகளினூடாக கடந்த 48 மணிநேரத்தில் (இன்று காலை 6.00 மணிவரை) 7 கோடியே 55 இலட்சத்து 8,100 ரூபா வருமானம் கிடைத்துள்ளது.

குறித்த காலக் கட்டத்தில் நெடுஞ்சாலைகளினூடாக 2 இலட்சத்து 56 ஆயிரத்து 225 வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபட்டதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எல்.வி.எஸ். வீரகோன் கூறியுள்ளார்.

இந்த காலக் கட்டத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளில் ஏற்பட்ட விபத்துக்களில் 41 இடங்கள் சேதமடைந்துள்ளன.

எனினும் உயிரிழப்பு தொடர்பான விபத்துக்கள் எதுவும் பதிவாகவில்லை என்றும் வீரகோன் குறிப்பிட்டார்.

Leave a Reply